நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

நில முகவர்கள் சங்கம் சார்பில்   நீர் மோர் பந்தல் திறப்பு விழா
X
குமாரபாளையத்தில் நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

நில முகவர்கள் சங்கம் சார்பில்

நீர் மோர் பந்தல் திறப்பு விழா


குமாரபாளையத்தில் நில முகவர்கள் சங்கம் சார்பில்

நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தலைவர் சின்னுசாமி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று, நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இவர் பேசியதாவது:

வெயில் காலம் நம்மை சோர்வடைய செய்யும். உடல் பலகீனமாகும். இதை தவிர்க்க மோர், இளநீர், தர்பூசணி, கம்பு கூழ் போன்றவைகளை உண்டு, நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். பெரும்பாலோர் வேலை எல்லாம் வெயிலில் சுற்றி செய்வதுதான். வெயில் என்பதற்காக வெளியில் வராமல், வேலை செய்யாமல் இருக்க முடியுமா? நில முகவர்கள் வேலை முற்றிலும் வெயிலில் அலைந்து செய்யவேண்டிய வேலை ஆகும். இந்த நேரத்தில் பொதுமக்கள் நன்மைக்காக இது போன்ற நீர் மோர் பந்தல் அமைத்து, சேவை செய்வது, மிகவும் புண்ணியம் ஆகும். வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் நில முகவர்கள் சங்கம் சார்பில்

நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

Next Story
ai based agriculture in india