இரவில் இயங்கிய வணிக நிறுவனங்கள்... எச்சரித்து மூடச்செய்த நகராட்சி ஊழியர்கள்!

இரவுநேர ஊரடங்கு உத்தரவை மீறி, குமாரபாளையத்தில் இரவில் இயங்கிக் கொண்டிருந்த வணிக நிறுவனங்களை நகராட்சி ஊழியர்கள் எச்சரிக்கை செய்து மூடச் செய்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்றிரவு முதல், இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, இரவு 9 மணி முதல் அனைத்து வணிக நிறுவனங்களும் உணவகங்கள் என அனைத்து கடைகளும் அடைக்க வேண்டும் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இரவு 10 மணி முதல், அதிகாலை 4 30 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அந்த நேரத்தில் வாகனப் போக்குவரத்தோ, கடைகளோ, வணிக நிறுவனங்களோ செயல்படக்கூடாது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதியில், அரசு உத்தரவுபடி வணிக நிறுவனங்கள் உணவகங்கள் அடைக்கப்பட்டு உள்ளதா என்பதை, நகராட்சி அதிகாரிகள் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இரவு 9 மணிக்கு ஆய்வைத் தொடங்கிய அவர்கள், ஒன்பது முப்பது மணி கடந்தும் ஒரு சில உணவகங்களும் வணிக நிறுவனங்கள் இயங்கி வந்தது கண்டனர்.

அந்த உணவகங்களிலும் வணிக நிறுவனங்களையும், முதல் நாள் என்பதால் எச்சரிக்கையுடன் விடுவதாகக் கூறிய அதிகாரிகள், தினசரி 9 மணிக்குள் கடைகளை அடைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். எச்சரித்து கடைகளை மூடச் செய்தனர். இரவில் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் குமாரபாளையம் பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil