/* */

சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டதால், உடல் உறுப்புகள் தானம். அரசு அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

சாலை விபத்தில் இளைஞர் பலி :  உடல் உறுப்புக்கள் தானம்..!
X

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டதால், உடல் உறுப்புகள் தானம் கொடுத்த நிலையில், ஆர்.டி.ஓ. சுகந்தி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி. பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டதால், உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானம் கொடுக்க முடிவு செய்தனர். அரசு அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

குமாரபாளையம் அடுத்துள்ள ரங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் வயது 26. கல்லூரி படிப்பு முடித்த இவர், கடந்த ஞாயிறன்று இரவு ரங்கனூரில் இருந்து வெப்படை செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது காலை 09:00 மணிக்கு எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குடிநீர் குழாய்க்காக பதிக்கப்பட்ட காற்று ஏற்றும் குழாய், சாலை நடுவில் இருப்பதால், அதில் மோதி தடுமாறிக் கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பிரசாந்த் இருசக்கர வாகனம் மீது மோதியதில், தூக்கி வீச பட்டு படுகாயம் அடைந்த பிரசாந்தை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று அவர் மூளைச் சாவு ஏற்பட்டதையடுத்து, அவருடைய குடும்பத்தாரின் விருப்பத்திற்கேற்ப பிரசாந்தின் உடல் உறுப்புகள் சேலம் அரசு மருத்துவமனையிலேயே தானம் செய்யப்பட்டது.

இந்த உடல் உறுப்புக்கள் சென்னை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து, உடல் உறுப்புகள் தானம் பெற்ற பிறகு சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவர்கள், செவிலியர்கள், பிரசாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அவருடைய உடல் குமாரபாளையம் ரங்கனூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

இதில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, அரசு சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிரசாந்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில் எலந்தகுட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், வெப்படை புற காவல் நிலைய போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்று பிரசாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

Updated On: 22 May 2024 3:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் இரவில் வெற்றிலையை மென்று சாப்பிடுங்க... இதுல ஏகப்பட்ட விஷயம்...
  2. லைஃப்ஸ்டைல்
    பாகற்காய் கசப்புதான்; அதுதரும் பலன்களோ பலமடங்கு இனிப்பானது - அந்த...
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?
  4. குமாரபாளையம்
    தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
  5. சிங்காநல்லூர்
    சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவில்தான் மோடி பிரதமராக இருக்கிறார்...
  6. குமாரபாளையம்
    உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதி மொழி
  7. போளூர்
    போளூர் அருகே நடந்த கார் விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழப்பு
  8. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி: ஜூன்.25ல் துவக்கம்
  9. ஆரணி
    ஆரணி அருகே மூன்று நாட்களாக மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு
  10. ஈரோடு
    கொடுமுடியில் 19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்