குமாரபாளையம் நகராட்சி தலைவரை தாக்கி பேசிய முன்னாள் அமைச்சர்..!
குமாரபாளையத்தில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேசினார்.
குமாரபாளையத்தில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நகராட்சி தலைவரை தாக்கி முன்னாள் அமைச்சர் பேசினார்.
குமாரபாளையம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு கதிர்வேல் மகாலில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது. ஈரோடு தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, குமாரபாளையம் நகர செயலர் பாலசுப்ரமணி, முன்னாள் நகர செயலர் குமணன், முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன், முன்னாள் நகர செயலர் குமணன் உள்பட பலர் வாழ்த்தி பேசி, அசோக்குமாருக்கு ஆதரவு தர வேண்டி கேட்டுக்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
ஆற்றல் அசோக்குமார் கார்பரேட் தொழில் செய்துவருவதாக எதிர்தரப்பினர் கூறி வருகின்றனர். இவர் உழைப்பால் சம்பாரித்து, மலிவு விலையில் உணவு, இலவச மருத்துவ சேவை, பள்ளிக்கட்டிடங்கள், கோவில் புனரமைப்பு பணிகள் செய்து வருகிறார். இது போல் எதிர்தரப்பில் யார் செய்கிறார்கள்.
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார். காவிரியில் நீர் திறந்து விட வேண்டி, நாடாளுமன்றத்தை 21 நாட்கள் முடக்கி வைத்து, சரித்திர சாதனைக்கு பின் தண்ணீரை பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. குமாரபாளையத்தில் தேர்தல் பணிமனை அமைக்க, இடம் தேர்வு செய்து, பணிகள் துவங்கிய பின், அந்த இடத்தை எங்களுக்கு கொடுக்கக் கூடாது என போலீஸ், கட்சி மேலிடம் மூலம் தடுத்து நிறுத்தினார் குமாரபாளையம் நகராட்சி தலைவர்.
இவர் என் வீட்டிற்கு இரு நாட்கள் வந்து, என்னிடம் இரண்டு மணி நேரம் பேசி, அ.தி.மு.க.வில் இணைவதாக கூறினார். இப்படி சொல்லி குமாரபாளையம் நகர செயலர் பதவியை பெற்றவர் அவர். தி.மு.க.வில் தொடர்ந்து செயல்பட விரும்பவில்லை என்று கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட செயலர் விஜய்சரவணன், மாவட்ட பொருளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu