பனியின் தாக்கத்தால் பெண் உயிரிழப்பு

பனியின் தாக்கத்தால்  பெண் உயிரிழப்பு
X

கோப்புப்படம் 

குமாரபாளையத்தில் கடுமையான பனியின் தாக்கத்தால் பெண் ஒருவர் உயிரிழந்தார்

குமாரபாளையம் கலைமகள் வீதியில் வசித்து வந்தவர் ராதா, 36. இவரது கணவர் விஜய்ஆனந்த், 34. இருவருக்கும் ஆறு மாதங்கள் முன்பு காதல் திருமணம் நடந்தது. ராதா இடது கால் ஊனமானவர்.

திருமணத்திற்கு பின் சென்னையில் உள்ள தன் பெற்றோர் ராதாவிடம் பேசுவது இல்லை. அவரது அக்கா லதா மட்டும் பேசி வந்தார். சில நாட்கள் முன்பு ராதாவிற்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது. சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்து அழைத்து வந்தனர். சிறு வயது முதல், பனி காலத்தில் மூச்சு விட சிரமம் ஏற்பட்டு வைத்தியம் செய்து வந்தேன் என்று கூறியுள்ளார்.

அதிகாலை 03:45 மணியளவில் பனி தாங்க முடியாமல் பற்களை நறவென்று கடிக்கும் சத்தம் கேட்டு, விஜய்ஆனந்த் எழுந்து, தன் மனைவிடம் பேச, ராதா எந்த பேச்சும் இல்லாமல் இருந்தார்.

அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைத்து வந்து காட்டினார். கவுரிசங்கர் என்பவர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார். அங்கு வந்த ஆம்புலன்சில் இருந்த பணியாளர் ராதாவை பரிசோதித்த போது, அவர் இறந்து விட்டார் என்று கூறினார்.

அதில் நம்பிக்கை இல்லாத விஜய்ஆனந்த் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!