குமாரபாளையத்தில் பேருந்து நிலைய புதிய கழிப்பிடம் திறப்பு

குமாரபாளையத்தில் பேருந்து நிலைய புதிய கழிப்பிடம் திறப்பு
X

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்ட புதிய கழிப்பிடம்.

குமாரபாளையத்தில் பேருந்து நிலைய புதிய கழிப்பிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் பேருந்து நிலைய புதிய கழிப்பிடம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் பயணிகள், டெம்போ, ஆட்டோ, கார், ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். விரைவில் திறக்க கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூறியபோது, ஜன. 24ல் நகராட்சி பணியாளர்களை கொண்டு கழிப்பிடம் திறக்கப்படும் என்று கூறினார். அதன்படி இந்த புதிய கழிப்பிடம் இன்று திறக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!