செயல்பாட்டுக்கு வந்த புதிய தாலுகா அலுவலகம்..!

செயல்பாட்டுக்கு வந்த புதிய தாலுகா அலுவலகம்..!
X

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகத்திற்கு, திறப்பு விழாவிற்கு பின் முதன்முதலாக முன்னாள் அமைச்சர் தங்கமணி வந்து பார்வையிட்டார்.

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தது.

செயல்பாட்டுக்கு வந்த புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழாவிற்கு பின் முதன்முதலாக வந்த முன்னாள் அமைச்சர்

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தது.

குமாரபாளையம் தற்காலிக தாலுகா அலுவலகம் 2016, பிப். 27 முதல் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திருமண மண்டபத்தில், அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர் தங்கமணி உத்தரவின் பேரில் செயல்பட்டு வந்தது. அமைச்சர் தங்கமணி பரிந்துரையின் பேரில் புதிய தாலுகா அலுவலகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் மாளிகை வளாகத்தில் புதிய தாலுக்கா அலுவலகம் கட்டப்பட்டது. அதன்பின் ஆட்சிமாற்றம் ஆனபின் நீண்ட நாட்களாக தாலுக்கா அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது.

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவேண்டும் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையடுத்து, தற்காலிக தாலுகா அலுவலகம் திறக்கப்பட்ட பிப். 27ல், 8 ஆண்டுகளுக்கு பின் அதே நாளில் முதல்வர் ஸ்டாலினால் காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டது. இதுவரை செயல்பட்ட தாலுகா அலுவலகத்தில் இருந்த சாமான்கள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய தாலுகா அலுவலகம் புதிய தாலுகா அலுவலகத்தில் செயல்பட துவங்கியது.

திறப்பு விழாவிற்கு பின் முன்னாள் அமைச்சர் தங்கமணி, புதிய தாலுகா அலுவலகம் வந்து பார்வையிட்டார். தாசில்தார் சண்முகவேல் வரவேற்றார். புதிய தாலுகா அலுவலக நுழைவுப்பகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலுகா அலுவலகம் என்பது குறித்து அனைவரும் அறிந்திடும் வகையில், "குமாரபாளையம் தாலுகா கொண்டுவந்து, குமாரபாளையம் நகரத்தில் தாலுகா அலுவலகம் அமைத்து, பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி, கட்டிடம் கட்டி கொடுத்த முன்னாள் முதல்வர் இடைப்பாடியார், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நன்றி" என பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில் 25-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா..!