குமாரபாளையத்தில் புதிய ரேசன் கடை துவக்கம்

குமாரபாளையத்தில் புதிய ரேசன் கடை துவக்கம்
X

புதிய ரேசன் கடை திறப்பு விழாவில் குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

எம்ஜிஆர் நகர் பஸ் நிறுத்தம் அருகே கொமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் புதிய ரேசன் கடை அமைக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இருந்ததால் மாதந்தோறும் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்கும் வகையில் எம்ஜிஆர் நகர் பஸ் நிறுத்தம் அருகே எஸ்.404.பி. கொமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட்., சார்பில் புதிய ரேசன் கடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில், குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்தார். வங்கி தலைவர் ராஜு, ஒன்றிய கவுன்சிலர் மணி, உதவி தலைவி புனிதா, வார்டு உறுப்பினர்கள் மோகன், குணவதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story