தீபாவளியன்றே அமாவாசை: குமாரபாளையத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

தீபாவளியன்றே அமாவாசை: குமாரபாளையத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
X

தீபாவளியன்று வெறிச்சோடிய குமாரபாளையம் மீன் மார்க்கெட்.

தீபாவளி பண்டிகை அன்றே அமாவாசை வந்ததால் குமாரபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக இறைச்சி கடைகள் செயல்பட அரசு அனுமதி மறுத்திருந்தது. இதனால் இறைச்சி கடையினர் வாழ்வாதாரம் இன்றி பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். சில தளர்வுகளுடன் இறைச்சி கடைகள் மீண்டும் செயல்பட்டன.

கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால், பெரும்பாலான மக்கள் விரதம் இருந்து வந்ததால், அம்மாதம் முழுவதும் வியாபாரமின்றி இறைச்சி கடையினர் தவிப்புக்குள்ளாகினர்.

தற்போது ஐப்பசி மாதம் பிறந்தும் தீபாவளி நாள் அன்றே அமாவாசையும் வந்ததால், அன்று பெரும்பாலானோர் இறைச்சி உண்பதில்லை. எனவே ஆட்டிறைச்சி, கோழி, மீன் இறைச்சி கடைகள் வெறிச்சோடியது. இதனால் குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இறைச்சி வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

Tags

Next Story