குமாரபாளையத்தில் புதிய திராவிட கழக மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் நடந்த புதிய திராவிட கழகம் மாநில மாநாடு ஆலோசனை கூட்டத்தில் நிறுவனர் ராஜ் பேசினார்.
புதிய திராவிட கழகம் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.
புதிய திராவிட கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச் சங்க 5வது மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் காடையார் சரவணன் தலைமையில் குமாரபாளையத்தில் நடந்தது. இதில் முன்னதாக வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. பெண்கள் ஒரே மாதிரியான ஆடையில் அணிவகுத்து ஆடினர். இதில் சிறப்பு அழைப்பாளராக நிறுவனர் ராஜ் பங்கேற்று, மாநாடு குறித்தும், செயல்வீரர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற தை 7ல் அதாவது ஜன. 21ல் புதிய திராவிடர் கழகம், மற்றும் கொங்குநாடு வேட்டுவ இளைஞர் நலச்சங்கம் இணைந்து 5வது மாநில மாநாடு ஈரோட்டில் கொங்கு மண்டபத்தில் நடத்த இருக்கிறோம். இதில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர் பெருமக்கள் எங்கள் அழைப்பை ஏற்று வருவதாக கூறி உள்ளார்கள். இந்த மாநாடு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். இது நான்காவது பொதுக்கூட்டம். பெயர்ப்பலகை திறப்பு, கொடியேற்று விழா, செயல் வீரர்கள் கூட்டம், 2024 நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் எங்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும், கொல்லிமலையில் வல்வில் ஓரிக்கு சிலை மற்றும் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வர் அனுமதி தந்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். மதவாத அரசியல் செய்யும் கட்சி பா.ஜ.க. அண்ணாமலைக்கு எங்களை பற்றி பேச தகுதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகிகள் கவுதம், காசிலிங்கம், கணேஷ், சர்மா, ஜெகதீஷ், சந்தோஷ், சிவகுமார், சந்தீப், விஜயகுமார், விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu