புதிய தினசரி சந்தையில் வியாபாரம் பூஜையுடன் துவக்கம்..!

புதிய தினசரி சந்தையில் வியாபாரம்  பூஜையுடன்  துவக்கம்..!
X

குமாரபாளையம் புதிய சந்தை துவக்கவிழாவில் தலைவர் விஜய்கண்ணன்னுக்கு  மரியாதை செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட தினசரி சந்தையில் உள்ள கடைகளின் வியாபாரம் பூஜையுடன் துவங்கியது.

குமாரபாளையத்தில் புதிய தினசரி சந்தையில் வியாபாரம் பூஜையுடன் துவங்கியது.

குமாரபாளையம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட தினசரி சந்தை கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு, வியாபாரம் நேற்று பூஜையுடன் துவங்கியது. நகராட்சி தலைவர், வடக்கு நகர செயலர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். மார்க்கெட் சங்க தலைவர் வெங்கடேசன், குத்தகைதாரர் விக்னேஷ், மற்றும் வியாபாரிகள் பலரும் விஜய்கண்ணனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விஜய்கண்ணன் பேசியதாவது:

வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை தூய்மையாக வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சுகாதார முறையில் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்படுகின்ற துறை சார்ந்த அறிவுப்புகள் 3 மாத காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளதன் அடிப்படையில், உடனடியாக அரசாணைகள் வெளிடப்பட்டு அதற்கான நிதி ஒப்பளிப்பு செய்து இந்த சந்தைப் பணிகள் நடைபெற்று முடிந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!