குமாரபாளையம் பள்ளிகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா...
குமாரபாளையம் சுந்தரம் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் சுந்தரம் காலனி நகராட்சி துவக்க பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா தலைமை ஆசிரியை புஸ்பலதா, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
நேதாஜி திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, பேச்சு, மாறுவேடம், மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகம், டிபன்பாக்ஸ், வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, நர்மதா, மணிமலா மற்றும் தீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு உயர்நிலைப் பள்ளி:
குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை செல்வி தேசியக்கொடி ஏற்றி வைத்து, நேதாஜியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆசிரியை அம்சா, இந்திய விடுதலைப் போராட்டமும் நேதாஜியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசு ஆண்கள் பள்ளி:
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி., சாரணர் படையினர், செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா தலைமையாசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது. விழாவின்போது, தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, ஆசிரியர்கள் சாரணர் படை ஆசிரியர் சரவணன், ஆசிரியர்கள் சிவகுமார், மகேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
அரசு நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள்விழா நூலகர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. உஷா, சித்ரா, பிரகாஷ், உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu