பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
X

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் வைரவன் கூறியதாவது:- சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டுள்ளது. 20 ஆண்டு கால கோரிக்கையான, 41 மாத பணி நீக்க காலத்தை குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் இந்த கூட்டம் நடந்து கொண்டுள்ளது. 41 மாத பணி நீக்க காலத்தை ஓய்வூதிய பலன்களுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அறிவிக்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் விஜயகுமார், மணிவண்ணன், முருகேசன், கண்ணன், அரிமயில்சங்கர், ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன், வெங்கிடு, ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி