மேல் படிப்பில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற்றுத்தரும் என்.சி.சி. பயிற்சி

மேல் படிப்பில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற்றுத்தரும் என்.சி.சி. பயிற்சி
X

அந்தோணிசாமி, என்.சி.சி. அலுவலர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம்.

மாணவ, மாணவியர்களுக்கு என்.சி.சி. பயிற்சி மேல் படிப்பில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற்றுத்தருகிறது.

உயர் கல்விக்கு மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற்றுத்தருவதில் என்.சி.சி. பயிற்சி முதல் இடத்தில் உள்ளது.

இது குறித்து குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2ம் நிலை என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கூறியதாவது:

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 27 ஆண்டுகளுக்குப் பின் 2017, செப். 26ல் மீண்டும் என்.சி.சி. பயிற்சி துவக்கப்பட்டது. என்.சி.சி. அலுவலராக ஆவதற்கு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 90 நாட்கள் பயிற்சி பெற வேண்டும்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. அலுவலராக பணியில் சேர்ந்த பின், மாணவர்களை பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு, 15வது பட்டாலியன் மூத்த அலுவலர்கள் உதவியுடன், மாணவர் தகுதி தேர்வு நடத்தப்படும். இதில் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு 50 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவர்களுக்கு இரண்டு ஆண்டு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். இதன் முடிவில் பயிற்சி முகாம் நடத்தப்படும். இதில் துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி பிரித்து பூட்டுதல், வீர நடை பயிற்சி, கம்பாஸ் கருவி மூலம் தூரத்தை கணக்கிடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும் எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு ஆகியன நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெறும் மாணவ, மாணவியர்கள் கல்லூரி மேற்படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, போலீஸ் மற்றும் இராணுவத்தில் சேர முன்னுரிமை, என 2 முதல் 5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கப்பெறுவார்கள். இந்த என்.சி.சி. பயிற்சியில் ராணுவத்திற்கு நிகரான பயிற்சி அளிக்கப்படுவதையுடன் தலைமைப் பண்பு, சமூக சேவை உள்ளிட்ட பல வகையான பயிற்சியளிக்கப்படுகிறது.

என்.சி.சி.யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்கள் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கப்பெறுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

சாரணர் பயிற்சி, என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ் போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைப்பதுடன் மாணவர்களை ஒழுக்கம், பண்பு, கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, உயர்ந்த குறிக்கோள் போன்ற தகுதிகள் கிடைக்கும் வகையிலான நல்ல குடிமகன்களாகவும் உருவாக்குவதில் முக்கிய பங்களிக்கின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!