அரசு ஆண்கள் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை..!

அரசு ஆண்கள் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை..!
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி மாணவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்ததையடுத்து, தலைமையாசிரியர் ஆடலரசு பாராட்டினார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி மாணவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்தனர்.

அரசு ஆண்கள் பள்ளியின் 8 என்.சி.சி. மாணவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி மாணவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்தனர்.

என்.சி.சி. மாணவர்களுக்கான ஆண்டு பயிற்சி முகாம், ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் கமாண்டிங் அலுவலர் கர்னல் அஜய் குட்டினோ, நிர்வாக அலுவலர் கோபால் கிருஷ்ணா தலைமையில் நடந்தது. பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 360 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடந்த இந்த முகாமில் பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

.இவற்றில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வீரநடை பயிற்சி, துப்பாக்கி சுடுதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கபட்டு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் துப்பாக்கி சுடுதலில் 8 மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றார்கள். இவற்றில் பரத் என்ற மாணவன் 3 சென்டிமீட்டர் அளவிற்குள் குண்டுகளை பதித்து மிகச் சிறந்த பள்ளி மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இம்மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு, ஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் ஹவில்தார் விஜயகுமார் உள்பட பலர் பாராட்டி வாழ்த்தினார்கள். மேலும் நெசவுத்தொழில் துறை ஆசிரியர் கார்த்தி, மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஆசிரியர் பெருமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி உடனிருந்து ஏற்பாடு செய்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil