விமானப்படையில் என்.சி.சி. மாணவர்கள்..! பள்ளி வளாகத்தை பார்வையிட்ட அதிகாரிகள்..!
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விமானப்படைக்காக என்.சி.சி. மாணவர்கள் சேர்க்கை நடத்த, பள்ளி வளாகத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
விமானப்படையில் என்.சி.சி. மாணவர்களை சேர்ப்பதற்கு தேர்வு நடத்த, பள்ளி வளாகத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விமானப்படைக்காக என்.சி.சி. மாணவர்கள் சேர்க்கை நடத்த, பள்ளி வளாகத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக விமான பிரிவு தேசிய மாணவர் படை தோற்றுவிப்பதற்கு அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டனர்.71 ஆண்டுகள் மிகவும் பழமையான பள்ளியில் கடந்த எட்டு வருடங்களாக ராணுவ பிரிவின் என்.சி.சி. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு விமானப் பிரிவு என்.சி.சி. புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது.
சேலம் 5 வது தமிழ்நாடு விமானப் படை ஸ்கோடன் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த குரூப் கேப்டன் முருகானந்தம் ஆணையின்படி, சார்ஜன்ட் தன்மாய் டாங்கர் மற்றும் கார்போரல் அஸ்லி ஜென்சிலின் ஆகியோர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து, பள்ளி கட்டமைப்புகள் குறித்து பார்வையிட்டனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு மற்றும் என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி வரவேற்றனர். பள்ளியின் பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானம் வகுப்பறைகள் ஆவணங்கள் ஆகியவை பார்வையிட்டனர்.
71 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் ஆயிரத்து 350 மாணவர்களின் நலன் கருதி அவர்களின் உயர்கல்விகாகவும் வேலை வாய்ப்பிற்காகவும் புதிதாக விமானப்படை என்.சி.சி பிரிவுகள் தொடங்கப்படுகிறது.. இதன் மூலம் மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்பில் சேர்வதற்கும் ராணுவம், காவல்துறை, வனத்துறை, ரயில்வே துறை, விமானப்படை போன்றவற்றில் சேர்வதற்கு 2 முதல் 5 சதவீத இட ஒதுக்கீடுகளும் கிடைக்கப்படும்.
ஆண்டுதோறும் புதிதாக 50 மாணவர்கள் விமானப்படை பிரிவு என் சி சி யில் சேர்ந்து பயிற்சி பெறுவார்கள் என்பதும், இதற்கு முன்னதாக ராணுவப் பிரிவு என் சி சி யில் 50 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி, கவிராஜ் ஆகியோர் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu