என்.சி.சி. மாணவர்களுக்கு டிரம் செட் : பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கல்

என்.சி.சி. மாணவர்களுக்கு டிரம் செட் :  பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கல்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் என்சிசி மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் ட்ரம் செட்டை நன்கொடையாக வழங்கியது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பி.டி.ஏ. நிர்வாகிகள் சார்பில் என்.சி.சி. மாணவர்களுக்கு டிரம்செட் நன்கொடையாக வழங்கப்பட்டது

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது. பி.டி.ஏ. தலைவர் வெங்கடேசன் தேசியக்கொடியேற்றி வைத்ததுடன், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். என்.சி.சி. மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பி.டி.ஏ. நிர்வாகம் சார்பில் 17 ஆயிரம் மதிப்பிலான டிரம் செட்டினை நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் வழங்கினார். செல்வம் பேசியதாவது:

நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில்தான் உள்ளது என சான்றோர் கூறுவார்கள். நீங்கள் நன்கு படித்து, உங்கள் துறை மூலம் நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும். நமது தமிழக காலாச்சாரம், பண்பாடு பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பி.டி.ஏ. நிர்வாகிகள் அன்பரசு, இளங்கோ, ராஜ்குமார், சுரேந்தர், விஜயன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஜேம்ஸ், உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ், முதுகலை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story