குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி.முகாம்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் சான்றிதழ் வழங்கும் முகாம் நடந்தது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் ஈரோடு 15வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஜெய்தீப், லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி ஆணையின் படி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி ஆண்டுக்கு 50 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி வழங்கி வருகிறார். இவர்களுக்கு என்.சி.சி.ஏ.சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலமாக போலீஸ், ராணுவம், ரயில்வே துறையில் 2 முதல் 5 சதவீதம் அரசு பணி நியமனத்தில் இட உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தலைமை ஆசிரியர் ஆடலரசு, பட்டாலியன் ஹவில்தார் தேவராஜ், கார்த்தி, விடியல் ஆரம்பம் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதே பள்ளியில் உலக பிசியோ தெரபி தினம் என்.சி.சி.சார்பில் கொண்டாடப்பட்டது. பிசியோதெரபி டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று முதலுதவி செய்யும் முறை, மருந்துகள் இல்லா மருத்துவம் குறித்து செயல்விளக்கம் கொடுத்ததுடன் 50 என்.சி.சி. மாணவர்களுக்கு நோட்டுகள், பேனாக்கள், மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். பள்ளி மேலாண்மை உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu