குமாரபாளையத்திஸ் நவராத்திரி விழா திருவிளக்கு வழிபாடு

குமாரபாளையத்திஸ் நவராத்திரி விழா திருவிளக்கு வழிபாடு
X

நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது

குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள்.

மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



Tags

Next Story
ai marketing future