இளம் வயதில் சாதனை படைத்த அட்சயம் ஆதரவற்றோர் மைய நிறுவனர் நவீன்குமார்
நவீன்குமார் , குமாரபாளையம்.
குமாரபாளையம் அட்சயம் ஆதரவற்றோர் மைய நிறுவனர் நவீன்குமார். இவரது பெற்றோர்கள் திருச்சி அருகே உள்ள முசிறியை சேர்ந்த பெரியண்ணன், அம்சவேணி. இவர் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் படித்து பட்டம் பெற்றார்.
எக்ஸல் கல்லூரியில் தெர்மல் இன்ஜினீரிங் எம்.இ., பட்டம் பெற்றார். கடந்த 2014ல் யாசகர் இல்லாத சமுதாயம் உருவாக்க அட்சயம் எனும் ஆதரவற்றோர் அமைப்பை துவக்கினார். தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அட்சயம் கிளைகளை துவங்கி, ஆங்காங்கே உள்ள யாசகர்களை காப்பகத்தில் சேர்த்தார்.இவரால் 986 பேர் மீட்கபட்டு காப்பகத்தில், பல்வேறு பணிகளில் உள்ளனர். 445 விழிப்புணர்வு நிகழ்சியில் பங்கேற்று பேசியுள்ளார்.
கடந்த 2015-2016ல் தேசிய இளைஞர் விருது இந்திய அரசின் சார்பில் குடியரசு தலைவர் வழங்கினார். சிறந்த இளைஞர் விருது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையாலும் பெற்றார். மகாத்மா காந்தி விருது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கையால் பெற்றார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கையால் சிறந்த சமூக ஆர்வலர் விருது பெற்றார். சிறந்த சாதனையாளர் விருது தமிழக முதல்வர ஸ்டாலின் கையால் பெற்றார். பல்வேறு ஊடகங்களில் இவரது பேட்டிகள், சாதனைகள் ஒளிபரப்பானது.
இவருக்கு நவ. 8ல் ரோகினி என்பவருடன் திருமணம் நடந்தது. ஈரோடு மாநகரில் அட்சயம் அமைப்பின் சார்பில் ஆதரவற்றோர் சேவை மையத்தினை 2020, டிச. 27ல் துவங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu