குமாரபாளையம் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட விழா

குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட விழாவில் தலைவர் இளங்கோ தலைமையில் மரக்கன்றுகள் நட்டபட்டன.
குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு தோறும் நாட்டு நலப்பணி திட்ட விழா நடைபெறுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக நேற்று கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட விழா முதல்வர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கல்லூரி தலைவர் இளங்கோ பங்கேற்று, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகத்தின் வழிகாட்டுதல் படி 5 மரக்கன்றுகள் நட்டு வைத்து ஜியோ டேக் செய்து வைத்தார்.
பின்னர் பேசிய கல்லூரி தலைவர் இளங்கோ, நாட்டு நலப்பணி திட்ட செயல்பாடுகளால் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் சேவை செய்வதற்கும், உதவி புரிந்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்கின்றனர்.
மரம் வளர்த்தல் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை. சுத்தமான காற்று மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே கிடைக்கும். தொழில் நுட்ப கல்வி இயக்குனரகத்தின் வழிகாட்டுதல் படி 5 மரக்கன்றுகள் நட்டு வைத்து ஜியோ டேக் செய்து வைக்கப்பட்டது.
இதன்படி தொழில் நுட்ப கல்வி இயக்குனரகத்திலிருந்து மரம் நடுதல் குறித்து அறிந்து கொள்ள முடியும். இதன்படி நேற்று ஒரே நாளில் பல தொழில்நுட்ப கல்லூரிகளின் சார்பில் 975 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்த விழாவில், பொதுநல சேவைகள் செய்த மாணவ, மாணவியர்களுக்கு நிர்வாகிகள் புருஷோத்தமன், ஈஸ்வர் பரிசுகள் வழங்கினர். இதில் என்.எஸ்.எஸ். அலுவலர்கள் முருகவேல், ஜெயபிரகாஷ், உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu