தேசிய அளவிலான கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேர்மன் பாராட்டு

தேசிய அளவிலான கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேர்மன் பாராட்டு
X

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த குமாரபாளையம் மாணவர்களை சேர்மன் சேர்மன் விஜய்கண்ணன் பாராட்டினார்.

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த குமாரபாளையம் மாணவர்களை சேர்மன் பாராட்டினார்.

நேஷனல் சோடோ கராத்தே பயிற்சி மையம் சார்பில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு வயது, எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. குமாரபாளையத்தை சேர்ந்த கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மையம் சார்பில் பங்கேற்ற பரத்குமார், திருநம்பி ஆகியோர் மஞ்சள், கருப்பு பெல்ட் பிரிவிலும், ஜுனுகிருஷ்ணன் பிரவுன் பெல்ட் பிரிவிலும் முதல் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை போட்டி அமைப்பாளர்கள் செந்தில்நாதன், நிர்வாகிகள் ஜெய்கணேஷ், விக்னேஷ், பசுபதீஸ்வரன், உள்ளிட்ட பலர் வழங்கினார்கள். வெற்றி பெற்ற மாணவர்களை குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் பயிற்சியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.

Tags

Next Story
ai future project