குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ.தேசியக்கொடி ஏற்றினார்.
குமாரபாளையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, தேசியக்கொடியேற்றி வைத்தார்.
இது போல் எம்.எல்.ஏ. அலுவலத்தில் குமாரபாளையம் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தவமணி, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆர்.ஐ. முருகேசன், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் பாரதி, காங்கிரஸ் கட்சி ஒரு அணியின் சார்பில் நிர்வாகி ஜானகிராமன், மற்றொரு அணியின் சார்பில் நிர்வாகி சிவகுமார், சி.பி.ஐ. கட்சி சார்பில் மூத்த நிர்வாகி ஈஸ்வரன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசு, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை தமிழீ, விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ், தளிர்விடும் பாரதம் சார்பில் அமைப்பளர் சீனிவாசன், மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை கவுல்சல்யாமணி ஆகியோர் தேசிய கொடி ஏற்றினார்கள்.
புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி, நாராயணநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பாரதி, அன்னை ஆதரவற்றோர் மையத்தில் இன்ஸ்பெக்டர் தவமணி, பாசம் ஆதரவற்றோர் மையத்தில் அமைப்பாளர் குமார் ஆகியோர் தேசி கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
மற்றும் பல இடங்களில் சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu