குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படை

குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படை
X

குமாரபாளையம் வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினரிடம் ஆர்.டி.ஓ. இளவரசி ஆலோசனை வழங்கினார்.

குமாரபாளையத்தில் காவிரி கரையோரப்பகுதியில் மக்களை பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

காவிரியில் அதிக வெள்ளம் வந்ததால் பொதுமக்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர். மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்த ஆர்.டி.ஒ. இளவரசி, மீட்பு படையினரிடம் ஆலோசனை வழங்கினார்.

தாசில்தார் தமிழரசி, தி.மு.க. நகர செயலர் செல்வம், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன், செந்தில்குமார், மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai healthcare products