குமாரபாளையத்தில் ஓபிஎஸ் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்...
குமாரபாளையத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ். அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜன் பேசினார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற முழக்கம் எழுந்ததைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இருதரப்பினரும், உண்மையான அதிமுக நாங்கள்தான் என்றும் அதிமுகவின் தொண்டர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாகவும் கூறி வருகின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் நீ்க்கி அறிவிப்பு வெளியிட்டனர். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் தனது அணியைச் சேர்ந்தவர்களை மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஓ. பன்னீர்செல்வம் அறிவித்து வருகிறார்.
புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதியில் அறிமுகக் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஓபிஎஸ் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலர் ராஜ்கணேஷ் பங்கேற்று 33 வார்டு செயலாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் நாகராஜன் பேசியதாவது:
அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். ஓ. பன்னீர்செல்வத்தால் அடையாளம் காட்டப்படும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பலரும் நம் கட்சிக்கு வந்து கொண்டு உள்ளனர் என நாகராஜன் தெரிவித்தார். கூட்டத்தில், கவுன்சிலர் ரேவதி, நிர்வாகிகள் வெங்கடேசன், சீனிவாசன், லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தின்போது, கட்சி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu