குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த க்ரைம் செய்திகள்…

குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த க்ரைம் செய்திகள்…
X
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

கார் மோதி ஒருவர் பலி:

குமாரபாளையத்தில் உள்ள சேலம் கோவை புறவழிச்சாலையில் ஓட்டல் நடத்தி வருபவர் அருள்செல்வன் (வயது 48). இவர் நேற்றுமுன்தினம் காலை 11:30 மணியளவில் ஆனங்கூர் சாலை காவடியான்காடு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் அருள்செல்வன் பலத்த காயமடைந்தார். இதையெடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அருள்செல்வனை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்து தொடர்பாக கார் ஓட்டுநரான பவானியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (29) என்பவரை கைது செய்தனர்.

மழைநீரில் வழுக்கி விழுந்தவர் சாவு:

குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 68). இவர், கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மழையில் நனைந்தபடி சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்த அவர் காயமடைந்தார்.

சில நாட்கள் கழித்து அவர் தலையில் வலி அதிகமாக இருந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் நேற்றுமுன்தினம் இரவு இறந்தார்.

இருசக்கர வாகனங்கள் மோதியதில் மூவர் படுகாயம்:

பள்ளிபாளையம் வட்டூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 51), விவசாயி. இவரும் எலச்சிபாளையத்தை சேர்ந்த தங்கவேலுவும் (61) சேர்ந்து உறவினரின் மகனுக்கு வரன் பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் ஒரு இருசக்கர வாகனத்தில் குமாரபாளையம் சென்றனர்.

சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்கும் போது, சேலம் சாலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த வாகனம் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். எதிர் முனையில் இருசக்கர வாகனத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த மணிசேகர் (25) என்பவரும் படுகாயமடைந்தார்.

இதைத்தொடர்ந்து, காயமடைந்த மூவரும் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

விஷ மாத்திரை சாப்பிட்டு பெயிண்டர் சாவு:

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் (வயது 56). பெயிண்டர். இவர் பல நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என தன் மனைவி கலைச்செல்வியிடம் பல முறை கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், வேலைக்கு செல்வதாக கூறி சென்ற கோபாலகிருஷ்ணன் கடன் செலுத்த முடியாமல் விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டேன் என கூற, அவரை ஈரோடு அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனில்லாமல் அதே நாளில் இரவு 7:10 மணிக்கு இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

கூலி தொழிலாளி தற்கொலை:

குமாரபாளையம் அருகே காவடியான்காடு பகுதியில் வசிப்பவர் கூலி தொழிலாளி கிருஷ்ணன் (வயது 48). இவர் சில மாதங்கள் முன்பு திடீரென்று மயக்கமடைந்து விழுந்த போது, மூளையில் ரத்த அடைப்பு உள்ளது தெரியவந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தலைவலி தாங்க முடியாமல் எலி மருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டதாக கிருஷ்ணன் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.

தனியார் கல்லூரி மாணவர் பலி:

குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சென்னையை சேர்ந்த ஆகாஷ் (வயது 20). நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து குமாரபாளையம் வந்த இவர் காலை 8 மணியளவில் கல்லூரி செல்ல சேலம் கோவை புறவழிச்சாலையை நடந்து கடக்கும் போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் ஆகாஷ் காயமடைந்தார்.

உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த குமாரபாளையம் போலீஸார் சேலம் அருகே உள்ள மிட்டாபுதூரைச் சேர்ந்த கார் ஓட்டுநரனாக பத்மநாபனை (34) பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!