குமாரபாளையத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் காயம்...

குமாரபாளையத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் காயம்...
X
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை பார் கவுன்சிலில் பணியாற்றி வருபவர் செந்தில் (வயது 47). இவர், தனது இருசக்கர வாகனித்தல் மனைவி நித்யாவுடன் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம், கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் வேகமாக வந்த கார், அவர்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற செந்திலும், நித்யாவும் பலத்த காயமடைந்து ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கார் ஓட்டுநரான கோவையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோகுலை (30) கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). சவரத் தொழிலாளி. இவர், சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு வாய்க்கால் அருகே தனது மனைவி கவிதா, மகன் தமன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவருக்கு பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம், இருசக்கர வானகம் மீது மோதியதில் ரமேஷ், கவிதா, தமன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் மூவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுனரான ஈரோட்டை சேர்ந்த ஜெகதீஷ் (29) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் எலவமலை பகுதியில் வசிப்பவர் சுந்தரம் (வயது 60). கட்டிட மேஸ்திரி. இவர், தனது இருசக்கர வாகனத்தில் சேலம் கோவை புறவழிச்சாலை சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கபட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் சுந்தரம் பலத்த காயமடைந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்து லாரி ஓட்டுநரான தஞ்சாவூரை சேர்ந்த முத்துக்குமார் (28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....