குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
குமாரபாளையம் பகுதியில் வெள்ள பாதிப்பு பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியாமரியம், மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டனர்.
குமாரபாளையம் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டனர்.
மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் காவிரியில் முழுவதுமாக திறந்து விடப்படுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இந்திரா நகர், மணிமேகலை தெரு, உள்ளிட்ட காவேரி கரையில் வசிப்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை குமாரபாளையம் ஜே. கே. கே. நடராஜா திருமண மண்டபம், ராஜேஸ்வரி திருமண மண்டபம், மற்றும் ஐயப்ப சேவா திருமண மண்டபத்தில்தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகள், நகராட்சி மற்றும் வருவாய் துறை மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை வெள்ள தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியாமரியம் மற்றும் மாவட்ட கலெக்டர் உமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
தாசில்தார் சிவகுமார், குமாரபாளையம் நகராட்சி தலைவரும், வடக்கு நகர திமுக பொறுப்பாளருமான விஜய் கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், நகராட்சி கமிஷனர் குமரன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள், மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, மல்லிகா, உஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu