முதியவர் சாவில் மர்மம் : அழுகிய நிலையில் உடல் மீட்பு

முதியவர் சாவில் மர்மம் :  அழுகிய நிலையில் உடல் மீட்பு
X
பள்ளிபாளையத்தில் முதியவர் சாவில் மர்மம் நீடித்து வருகிறது.

பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சி வெங்கடேசபுரத்தில் கடந்த ஆக. 6ல் முதியவர் சடலம் அழுகிய நிலையில் கிடைக்கப்பெற்றது.

பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததில் இறந்தவர் பெயர் காளியப்பன், 70, என்பதும், விவசாயம் செய்தும், ஆடுகள் மேய்த்தும் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இவர் வளர்த்த ஆடுகளில் 4 ஆடுகள் காணாமல் போனதாகவும், ஆடுகள் திருட வந்தவர்கள் இவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags

Next Story