முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
குமாரபாளையம் சத்யாபுரி முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
குமாரபாளையத்தில் சத்யாபுரி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையம் சத்யாபுரி, செல்வா விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஜன. 12ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. கணபதி யாக பூஜை புண்யாக வாசனம் உள்ளிட்ட பூஜைகளும், பவானி கூடுதுறை ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலமும், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது.
ஜன. 21ல் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்த நாட்களில் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக விழாவை யொட்டி, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவில் அர்ச்சகர் கோகுல் அய்யர் குழுவினர் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
நாட்டுப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இத்தெய்வங்கள் மக்களுள் மக்களாக வாழ்ந்து, தானாகவோ, ஊர் நன்மைக்காகவோ அல்லது குறிப்பிட்ட சிலரால் வன்கொலை செய்யப்பட்டோ உயிரிழந்தவர்கள்.
அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் தெய்வங்கள் கொல்லப்பட்டு இறந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர். அவ்வாறு வணங்கப் பெறும் தெய்வங்களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu