தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

தாலுக்கா அலுவலகத்தில்   முத்தரப்பு பேச்சுவார்த்தை
X
குமாரபாளையம் அருகே இறந்தவர்களின் நினைவாக 75க்கும் மேற்பட்டவர்கள் நினைவுக்கல் வைக்கும் சம்பவம் சம்பந்தமாக தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

தாலுக்கா அலுவலகத்தில்

முத்தரப்பு பேச்சுவார்த்தை

குமாரபாளையம் அருகே இறந்தவர்களின் நினைவாக 75க்கும் மேற்பட்டவர்கள் நினைவுக்கல் வைக்கும் சம்பவம் சம்பந்தமாக தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

குமாரபாளையம் அருகே இறந்தவர்களின் நினைவாக 75க்கும் மேற்பட்டவர்கள் நினைவுக்கல் நட வந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் சூழல் உருவானதையடுத்து, தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு சமுதாயத்தினர், அவர்களது குடும்பங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இறந்தவர்கள் நினைவாக, மற்றொரு சமுதாய நபர் ஒருவரின் பட்டா நிலத்தில் நினைவுக்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு நில உரிமையாளர் மற்றும் அவரது சமுதாயத்தினர், கல் வைத்த நபர்களிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நாட்டு வைத்த நினைவு கற்களை அகற்றுமாறு போலீசில் புகார் கொடுத்து, அந்த பிரச்னை தீராத நிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் என்று கூறி, 75க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இதற்கு நில உரிமையாளர் உள்ளிட்ட, நில உரிமையாளரின் சமுதாய மக்கள் பலரும் திரண்டதால், மோதல் சூழல் ஏற்பட்டது. குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து சமரசம் செய்து வைத்தனர். இது சம்பந்தமாக நேற்று தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சிவகுமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எவ்வித முடிவும் எட்டப்படாமல், வெள்ளிக்கிழமைக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் என்று கூறி, 75க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

Next Story
Similar Posts
தாலுக்கா அலுவலகத்தில்   முத்தரப்பு பேச்சுவார்த்தை
கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
சித்த மருத்துவரை கத்தியுடன் மிரட்டி பணம் பறித்த 7 பேர் கைது
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே தலைமை ஆசிரியர் பணியிடம்
ப.வேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்வு
காளியம்மன் கோவிலில் மகா குண்டம் மற்றும் ஊஞ்சல் உற்சவ விழா
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் ஆங்கில பயிற்சி
அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணையில் 96.940 மில்லியன் கன அடி நீர் திறப்பு
நம்பியூர் பேரூராட்சியில் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
காவிரி ஆற்றின் பராமரிப்பு பணி, குடிநீர் வழங்கல் 22ம் தேதி வரை பாதிப்பு
செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க., வீடியோ கான்பரன்சிங் கூட்டம்
கொங்கு கலை கல்லுாரி 31வது ஆண்டு விழா
தேசிய மக்கள் நீதிமன்றம்: 380 வழக்குகளில் 313க்கு தீர்வு