தாய் மீது குழவிக்கல்லை தூக்கி போட்டு கொல்ல முயற்சித்த மகன் கைது!

குமாரபாளையத்தில் தாய் மீது குழவிக்கல்லை தூக்கி போட்டு கொல்ல முயற்சித்த மகன் கைது செய்யப்பட்டான்.

தாய் மீது குழவிக்கல்லை தூக்கி போட்டு கொல்ல முயற்சித்த மகன் கைது

குமாரபாளையத்தில் தாய் மீது குழவிக்கல்லை தூக்கி போட்டு கொல்ல முயற்சித்த மகன் கைது செய்யப்பட்டான்.

குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பரமசிவம், 60. கைத்தறி கூலி. இவரது மகன் ராகுல், 27. டிப்ளமா படித்து விட்டு மெக்கானிக் வேலை செய்து வருகிறார். ராகுல் மனைவி கார்த்திகா கடந்த 8 மாதங்கள் முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஸ்ரீ லேகா என்ற பெண் குழந்தை உள்ளது. ராகுல் தினமும் குடித்து விட்டு தன் பெற்றோர் பரமசிவம், விஜயா ஆகியோரை குடி போதையில் மிரட்டி வந்துள்ளார். டிச. 26ல் இரவு 08:00 மணியளவில், தன் தாய் மீது குழவிக்கல்லை போட்டு கொன்று விடுவதாக கூறி, கல்லை போட, தாய் விஜயா நகர்ந்து கொண்டதால் உயிர் பிழைத்தார். பெற்றோர் தூங்கி கொண்டிருக்கும் போது, கதவை எட்டி உதைத்து உள்ளே வந்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தந்தை பரமசிவம் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகுலை கைது செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business