குமாரபாளையத்தில் நடந்த கொலையில் 23 வருடம் தலைமறைவாக இருந்த கைதி கைது

குமாரபாளையத்தில் நடந்த கொலையில் 23 வருடம் தலைமறைவாக இருந்த கைதி கைது
X

23 வருடங்களாக தலைமறைவாக இருந்த கைதியை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் நடந்த கொலையில் 23 வருடம் தலைமறைவாக இருந்த கைதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் 1998ம் ஆண்டு சுருக்கு பை கோபால் என்பவரை கொலை செய்து விட்டு, சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த கைதி ரவி அதன் பின்பு நீதி மன்ற வழக்கில் ஆஜராகாமல் தலமறைவானார்.

கடந்த 23 ஆண்டுகளாக ரவியை போலீசார் தேடி வந்தனர். ஈரோடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த ரவி என்கிற காஞ்சலிங்கம், என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர் நாமக்கல் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!