பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்த குமாரபாளையம் பள்ளி முன்னாள் மாணவர்கள்
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1989,- 1996 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
குமாரபாளையத்தில், அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1989,-1996 வரை படித்த, முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இந்த சந்திப்பில், பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த 148 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பம், பிள்ளைகள், அவர்களின் படிப்பு உள்ளட்டவை குறித்தும், பள்ளியில் படிக்கும் போது நடந்த சுவையான அனுபவங்கள் குறித்தும், மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த மாணவர்களில் ஈரோடு மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தில் டெவெலப்மென்ட் அலுவலர், வி.ஏ.ஒ.க்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், மின்துறை அலுவலர்கள், ஐ.டி.துறை, என பல பொறுப்பான பணிகளில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தாங்கள் படித்த அரசு பள்ளிக்கு, இனிவரும் காலங்களில் தங்களால் இயன்ற உதவிகள் செய்யலாம் எனவும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி வழங்கவும், இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் எனவும், ஏழ்மை நிலையில் இருக்கும் சக மாணவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu