நகராட்சி சிறுவர் பூங்கா : நகராட்சி தலைவர் ரிப்பன் வெட்டி திறப்பு..!

நகராட்சி சிறுவர் பூங்கா :  நகராட்சி தலைவர் ரிப்பன் வெட்டி திறப்பு..!
X

குமாரபாளையம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்காவை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்காவை நகராட்சி தலைவர் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி, ராஜராஜன் நகர் பகுதியில் கலைஞர் நகர் புறமேம்பாட்டு திட்டம் சார்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா ஆணையர் சரவணன் தலைமையில் நடந்தது.

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொறியாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர்கள் வேல்முருகன், ஜேம்ஸ், அழகேசன், நிர்வாகிகள் கந்தசாமி, சரவணன், ஜூல்பிகார் அலி, கதிரேசன், விக்னேஷ், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூய்மைப்பணி

தூய்மை இந்தியா திட்டம் சார்பில் தூய்மையே எங்களின் சேவை பணிகள் குமாரபாளையத்தில் அனைத்து வார்டுகளில், வார்டுக்கு இரண்டு இடங்கள் வீதம் 66 இடங்களில் நடத்தப்பட்டது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சிகளின் நிர்வாக சேலம் மண்டல இயக்குனர், அலுவலக திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர்.

இதில் கூட்டு துப்புரவு பணி, குப்பை தேங்கியுள்ள இடத்தை தூய்மை செய்து கோலமிடுதல், பேருந்து நிலையத்தை தூய்மை செய்தல், அங்கன்வாடி வளாகத்தை தூய்மை செய்தல், கோவில் வளாகம், சமுதாய கழிவறைகள், ஆற்று படுகைகள் ஆகிய இடங்களில் தூய்மை பணிகள் செய்து கோலமிடபட்டது.

இதில் ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சந்தனகிருஷ்ணன், ஜான்ராஜா, பொதுமக்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், குடியிருப்போர் நலச்சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர், அரசியல் பிரமுகர்கள், கவுன்சிலர்கள் பங்களிப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture