குமாரபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சேர்மன் ஆய்வு

குமாரபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி   சேர்மன் ஆய்வு
X

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததை சேர்மன் விஜய்கண்ணன் பார்வையிட்டார். 

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் வெள்ளம் சூழந்து இடங்களை நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளைம் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குமாரபாளையம் மணிமேகலை தெருவில் கட்டப்பட்டு வரும் நுண்ணுயிர் தயாரிக்கும் கட்டுமான பணிகளை சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வள்ளியம்மாள் உடனிருந்தார். ஐயப்பன் கோவில் பகுதியில் சர்வீஸ் சாலையில் தெரு விளக்கு இல்லாததால் அங்கு தெரு விளக்கு அமைத்து தர கவுன்சிலர் தர்மராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் குப்பைகள் அகற்றி மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கும் சேர்மன் பார்வையிட்டார். மேலும் காவிரியில் பெருகி வரும் வெள்ளத்தையும், கரையோர பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததையும் சேர்மன் விஜய்கண்ணன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு இடம், உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்தார். இதில் கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், கோவிந்தராஜ், கனகலட்சுமி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business