குமாரபாளையத்தில் உணவு வங்கியை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவர்

குமாரபாளையத்தில் உணவு வங்கியை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவர்
X

குமாரபாளையத்தில் நகர்மன்ற தலைவர் விஜய்கண்ணன் உணவு வங்கியை துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் உணவு வங்கியை நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நடராஜா நகர் இளங்காளையர் நற்பணி மையத்தினர் மருத்துவ உதவி, கல்வி உதவி உள்ளிட்ட பல ப ணிகளை செய்து வருகிறார்கள். கொரோனா காலத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக ஆதரவற்றவர்களுக்கு, விசைத்தறி தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.

தற்போது வரை அப்பகுதியில் உள்ள அதரவற்றவர்கள் 30 பேருக்கு ஒருவேளை உணவு வழங்கி வரும் நிலையில், இதனை விரிவுபடுத்தஉணவு வங்கியை துவங்க முடிவு செய்தனர். இதன் துவக்க விழா பள்ளிபாளையம் பிரிவு சாலை வேளாங்காட்டார் வளாக பகுதியில் நடைபெற்றது.

இதில் நகர்மன்ற தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்ட உணவு வங்கியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார்.

இது பற்றி நிர்வாகிகள் கூறுகையில், இங்குள்ள உணவு பொட்டலங்கள் வைக்கப்படும் உணவு வங்கி கண்ணாடி பீரோவில், பொதுமக்களின் வீட்டு விசேஷங்களில் மீதமாகும் உணவினை கூட பொட்டலங்களாக்கி இங்கு கொண்டு வைத்து வைக்கலாம். பொட்டலங்கள் கட்ட தேவையான கவர்களையும் இதில் வைத்துள்ளோம்.

இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் அழகேசன், சியாமளா, பரமேஸ்வரி, வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!