குமாரபாளையத்தில் மழை பாதிப்பு குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு

குமாரபாளையத்தில் மழை பாதிப்பு குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு
X

மழை பாதிப்பு குறித்து குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில்,  சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையத்தில் மழை பாதிப்பு குறித்து நகராட்சித் தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் கோம்பு பள்ளத்தில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் உள்ள பல வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டது.

இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். எஸ்.ஒ.-க்கு தகவல் தர, தூய்மைப்பணியாளர் சரி செய்தனர். இது போல் நகரில் பல இடங்களிலும் சரி செய்யப்பட்டது.

Tags

Next Story
ai devices in healthcare