குமாரபாளையம் மார்க்கெட்டில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு

குமாரபாளையம் மார்க்கெட்டில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு
X

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தானா, நகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார். இது பற்றி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக 20 மார்க்கெட்டுகள் 100 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகுவதுடன் குமாரபாளையம் உள்ளிட்ட 20 நகராட்சிகளில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டுகள் 65 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன.

இது சம்பந்தமாக ஆய்வு செய்ய நகராட்சிகள் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தானா, நகராட்சிகள் மண்டல நிர்வாக செயற் பொறியாளர் ராஜேந்திரன், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் தினசரி காய்கறி மார்க்கெட் சென்று ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினர். கொரோனா தடுப்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தவும் அறிவுரை வழங்கினர் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது எஸ்.ஒ. ராமமூர்த்தி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஐ. செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story