குமாரபாளையத்தில் கொடிக்கம்பங்களை அகற்றிய நகராட்சி பணியாளர்கள்

குமாரபாளையத்தில் கொடிக்கம்பங்களை அகற்றிய நகராட்சி பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றினர்.

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் விதிமுறைகள் அனைத்து பகுதியிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டும், அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டும் வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்கள் அருகில் குறிப்பிட்ட எல்லைக்குள் அரசியல் கட்சியினர் தேர்தல் நாளன்று வரக்கூடாது என்பதை குறிப்பிடும் வகையில் வெள்ளை கோடுகள் போடப்பட்டு வருகிறது.

Tags

Next Story
photoshop ai tool