தீவிர கொரோனா பிரச்சாரம் செய்யும் நகராட்சி பணியாளர்கள்

தீவிர கொரோனா பிரச்சாரம் செய்யும் நகராட்சி பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் தீவிர கொரோனா பிரச்சாரம் செய்து வரும் காட்சி. 

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் தீவிர கொரோனா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருவதாக கூறபடுகிறது. இதனால் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி, கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று குமாரபாளையம் நகராட்சி பணியாளர்கள் பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் சாலை மேம்பாலம் கீழ் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு முககவசம் இல்லாமல் வருவோருக்கு அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுத்திக்கொள்வது என மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!