அங்கன்வாடி மையத்திற்கு தொலைக்காட்சி வழங்கும் விழாவில் நகராட்சி சேர்மன் பங்கேற்பு

அங்கன்வாடி மையத்திற்கு தொலைக்காட்சி வழங்கும் விழாவில்  நகராட்சி சேர்மன் பங்கேற்பு
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி மையத்திற்கு டி.வி. வழங்கும் விழாவில் நகராட்சி சேர்மன் பங்கேற்று வாழ்த்தினார்.

குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு தொலைக்காட்சி வழங்கும் விழாவில் நகராட்சி சேர்மன் பங்கேற்று வாழ்த்தினார்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் 15வது கவுன்சிலர் கோவிந்தராஜ், தனது பிறந்தநாளையொட்டி, அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு டி.வி. வழங்கினார்.

இதில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, சியாமளா, பூங்கொடி, வேல்முருகன், ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சேர்மன் விஜய்கண்ணன் கூறுகையில், நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில். அதனால்தான் நிதி நிலை அறிக்கையில் கூட தமிழக அரசு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. குமாரபாளையம் நகராட்சியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!