குமாரபாளையம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நகராட்சி தலைவர் நிதியுதவி
குமாரபாளையத்தில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நிதியுதவி வழங்கினார்.
குமாரபாளையத்தில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நிதியுதவி வழங்கினார்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் ஏரித்தெருவில் மாடியில், சிமெண்ட் அட்டை போடப்பட்ட வீட்டில் வசிப்பவர் ராம்குமார்(வயது 45.). விசைத்தறி கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் அதிகாலை 02:00 மணியளவில் திடீரென்று இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இவரது வீட்டு துணிமணிகள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின. இவர்களுக்கு உதவிடும் வகையில் குமாரபாளையம் வடக்கு தி.மு.க. செயலாளரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன் நிவாரண பொருட்கள் வழங்கி, உதவித்தொகை வழங்கினார். நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சுமதி, ஜேம்ஸ், நிர்வாகிகள் விக்னேஷ், கந்தசாமி, ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் ரூபாய் 10.38 லட்சம் மதிப்பிலான காய்கறி,பாஸ்ட்புட் மற்றும் பூ விற்பனை செய்திட 13 விற்பனை வண்டிகள் வழங்கும் விழா நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி மற்றும் அதற்கான உத்தரவு நகல் ஆகியவற்றை வழங்கினார்.
பொறியாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ஜான்சிராணி, கவுன்சிலர்கள் ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன், ராஜ், தி.மு.க. நிர்வாகிகள் சரவணன், ஜுல்பிகார் அலி, கந்தசாமி, கதிரேசன், விக்னேஷ், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தூய்மை இந்தியா திட்டம் சார்பில் தூய்மையே எங்களின் சேவை பணிகள் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி குமாரபாளையத்தில் அனைத்து வார்டுகளில், வார்டுக்கு இரண்டு இடங்கள் வீதம் 66 இடங்களில் நடத்தப்பட்டது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சிகளின் நிர்வாக சேலம் மண்டல இயக்குனர், அலுவலக திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர். இதில் கூட்டு துப்புரவு பணி, குப்பை தேங்கியுள்ள இடத்தை தூய்மை செய்து கோலமிடுதல், பேருந்து நிலையத்தை தூய்மை செய்தல், அங்கன்வாடி வளாகத்தை தூய்மை செய்தல், கோவில் வளாகம், சமுதாய கழிவறைகள், ஆற்று படுகைகள் ஆகிய இடங்களில் தூய்மை பணிகள் செய்து கோலமிடபட்டது. இதில் ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சந்தனகிருஷ்ணன், ஜான்ராஜா, பொதுமக்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், குடியிருப்போர் நலச்சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர், அரசியல் பிரமுகர்கள், கவுன்சிலர்கள் பங்களிப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu