தங்கம், வெள்ளி பரிசுகளை வழங்கிய நகராட்சி நிர்வாகம்

தங்கம், வெள்ளி பரிசுகளை வழங்கிய நகராட்சி நிர்வாகம்
X

பரிசு பெற்ற பயனாளிகள்.

குமாரபாளையம் நகராட்சி தடுப்பூசி பயனாளிகளுக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டு என்று தமிழக அரசு, மாவட்ட கலெக்டர் வலியுறுத்தி வருகிறார்கள். இதன்படி அக். 23ல் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று அனைத்து முகாம்களிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், 8வது வார்டை சேர்ந்த சீனிவாசன், 10வது வார்டை சேர்ந்த பாப்பாத்தி, 3 வது வார்டை சேர்ந்த யுவராஜ் ஆகியோர் தங்க நாணயம் பெற தேர்வாகினர். 18வது வார்டை சேர்ந்த நந்தினி, 3 வது வார்டை சேர்ந்த சண்முகம் ஆகிய இருவரும் வெள்ளி நாணயம் பெற தேர்வாகினர். மேலும் 50 நபர்கள் எவர்சில்வர் பாத்திரங்கள் பெற தேர்வாகினர். இதன் பரிசளிப்பு விழா கமிஷனர் ஸ்டான்லிபாபு தலைமையில் நடைபெற்றது. நகர திமுக பொறுப்பாளர் செல்வம் பரிசு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார். பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ.-க்கள் செல்வராஜ், சவுந்தரராஜன் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!