கட்சி சின்னங்களில் தயாராகி வரும் மப்ளர்கள்!

கட்சி சின்னங்களில் தயாராகி வரும் மப்ளர்கள்!
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் கட்சி சின்னங்களில் மப்ளர்கள் தயாராகி வருகிறது.

குமாரபாளையத்தில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் துண்டு மற்றும் மப்ளர்கள் தயாரிக்கும் பணி தீவிரம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்சி சின்னங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கட்சி சின்னங்களில் தயாராகி வரும் மப்ளர்கள்

குமாரபாளையத்தில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் துண்டு மற்றும் மப்ளர்கள் தயாரிக்கும் பணி தீவிரம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்சி சின்னங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.


தற்பொழுது பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் வகையில் அனைத்து கட்சியினரின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட, வண்ணங்களில் துண்டுகள் மற்றும் மப்ளர்கள் தயாரிக்கும் பணி, குமாரபாளையத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் காலங்களில் தங்கள் கட்சியின் சின்னங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், கட்சியின் கொடிக்கு ஏற்ற வகையில் உள்ள வண்ணங்களில் மப்ளர்களும், துண்டுகளும் தயாரிக்கப்படுவதுடன், அவற்றில் அரசியல் கட்சியின் சின்னங்களும் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை மப்ளர்கள் அதிக அளவில் விற்பனையாவதாலும், தேர்தல் நேரம் என்பதாலும், இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்வதற்காக தற்பொழுது தீவிரமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


தங்களை அரசியல் கட்சியின் அடையாளமாக காட்டிக் கொள்ளும் இந்த மப்ளர்கள் மாற்று கட்சியினர் தங்கள் கட்சியில் இணையும் பொழுது வரவேற்கும் விதமாகவும், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குமாரபாளையத்தில் தயாரிக்கப்படும் மப்ளர்களை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதிக ஆர்வத்துடன் வந்து நிறுவனத்திடம் மொத்தமாக பேசி பெற்று செல்வது அதிகரித்துள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகளின் தேவைக்காக உற்பத்தியும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!