குமாரபாளையத்தில் இரத்த சுத்தகரிப்பு மையத்தை துவக்கிவைத்த எம்பி.,

குமாரபாளையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் எம்.பி., ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார்.
ரோட்டரி அறக்கட்டளை, குமாரபாளையம் ரோட்டரி சங்கம், எக்ஸல் மற்றும் காவிரி கல்வி நிறுவனங்கள் மற்றும் குமாரபாளையம் நகராட்சி இணைந்து முப்பெரும் விழா நடத்தியது.
இதில் ரூ.32 லட்சம் மதிப்பிலான ரோட்டரி சங்க இரத்த சுத்தகரிப்பு மையத்தினை எம்.பி., ராஜேஷ் குமார் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சர் சு.முத்துசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம் மதிப்பிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான டெஸ்க் மற்றும் பெஞ்ச் வழங்கினர்.
சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், ரூ.30 இலட்சம் மதிப்பில் குமாரபாளையம் ஜீவன் முக்தி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமையவுள்ள தியான மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இப்முப்பெரும் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த நமது முன்னாள் மாவட்ட ஆளுநர் நடேசன், எக்ஸல் கல்வி குழுமங்களின் துணை தலைவர் மதன் கார்த்திக், சிவசுந்தரம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுந்தரலிங்கம், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கோவிந்தாராஜு, வெங்கடேசன், வாசு, ஆளுநர் நியமனம் ராகவன், மாவட்ட பொறுப்பாளர்கள், ரோட்டரி சங்க தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், குமாரபாளையம் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu