குமாரபாளையத்தில் மலைபோல் தேங்கும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி

குமாரபாளையத்தில் மலைபோல் தேங்கும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி
X

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் அகற்றப்படாமல் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் காய்கறி கழிவுகள்.

குமாரபாளையத்தில் குப்பைகள் மலை போல் தேங்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குமாரபாளையம் நகரில் பஸ் ஸ்டாண்ட், தினசரி காய்கறி மார்க்கெட், சரஸ்வதி தியேட்டர் எதிரில், நாராயண நகர் பள்ளி அருகில், அரசு பி.எட்.கல்லூரி வாட்டர் டேங்க் அருகில் என பல இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன.

இதனால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். தொற்று நோய்கள் பரவி வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில், குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது நோய் பரவலை அதிகப்படுத்தும் என்பதால், தாமதமின்றி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!