சாலையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பு : வாகன ஓட்டிகள் அவதி

சாலையோரத்தில்  குப்பைக்கு தீ வைப்பு : வாகன ஓட்டிகள் அவதி
X

ரோடு ஓரம் வைக்கப்பட்டுள்ள தீ.

குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை மர்ம நபர்கள் சிலர் அவ்வப்போது தீ வைத்து செல்வதால், அந்த பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் இந்த புகையால் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது குப்பைகளை அள்ளாததின் விளைவாக ஒட்டுமொத்தமாக சேரும் குப்பைகளை சிலர் தீ வைத்து விட்டுச் செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!