போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
X

குமாரபாளையத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

குமாரபாளையத்தில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே நான்கு சாலை சந்திப்பு உள்ளது. குறிப்பாக சேலம் சாலை, இடைப்பாடி சாலை பகுதியில் இருந்து அதிக வாகனங்கள் இந்த சந்திப்பில் வந்து செல்கிறது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வரும் லாரிகள், இடைப்பாடி, தேவூர் பகுதியிலிருந்து வரும் கரும்பு லாரிகள், மேட்டூர் மின் வாரியத்தில் இருந்து மின் கம்பங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் உள்ளிட்டவை வந்தால், குறுகிய இந்த வளைவில் நீண்ட நேரம் போராடித்தான் கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது.

இதனால் அதிக அளவிலான பிற வாகனங்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பல விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இங்கு போக்குவரத்து போலீசார் யாரும் இருப்பதில்லை. போக்குவரத்து சிக்னலும் கிடையாது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை பணியில் நியமிக்க வேண்டும். முக்கியமான இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை அகற்றி சாலையை விரிவு படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்