குமாரபாளையத்தில் தவறான வழிகாட்டியால் வாகன ஓட்டிகள் அவதி

குமாரபாளையத்தில் தவறான வழிகாட்டியால் வாகன ஓட்டிகள் அவதி
X

குமாரபாளையத்தில் தவறான வழிகாட்டியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். (இடம்: குமாரபாளையம் சேலம், கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு )

குமாரபாளையத்தில் தவறான வழிகாட்டியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையம் சேலம், கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே குமாரபாளையம் நுழைவுப்பகுதி உள்ளது. இதன் முன்புறம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பவானி, கோபிசெட்டிபாளையம், இடைப்பாடி, மேட்டூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள, தாலுக்கா அந்தஸ்து பெற்ற, விசைத்தறி, கைத்தறி இதர தொழில்வளம் மிகுந்த குமாரபாளையம் நகரத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இது குமாரபாளையம் பகுதியில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்களின் மனக்குமுறலாக இருந்து வருகிறது.

குமாரபாளையம் பெயரை இருட்டடிப்பு செய்த நெடுஞ்சாலைத்துறையினருக்கு பல அரசியல் கட்சியினரும், பொதுநல ஆர்வலர்களும், தொழில்துறை அதிபர்களும், கல்வி நிறுவன உரிமையாளர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஜவுளித்தொழில் மேம்பட இந்த இடத்தில் குமாரபாளையம் பெயரும் இடம்பெற வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

அடுத்து, இந்த வழியாக பவானி, கோபி செட்டிபாளையம் செல்லலாம் என உள்ளது. இதை நம்பி பெரிய டிரக் வாகனங்கள் இந்த வழியாக உள்ளே நுழைந்து, பவானிக்கும், கோபிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பிரசித்தி பெற்ற பவானி கூடுதுறை கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த வழியாக சென்று காவேரி பழைய பாலம் சென்று விடுகிறார்கள். அங்கு கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இவர்கள் மீண்டும் தங்கள் வாகனத்தை திருப்பிக்கொண்டு வெகு தொலைவு சுற்றி செல்லும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

பவானி, கோபி செல்ல பவானி லட்சுமி நகர் சென்று செல்வதே எளிய வழி. குறைந்த தொலைவும் கூட. வாகன ஓட்டிகளின் துயர் போக்கவும், தேவையில்லாத வாகனங்கள் ஊருக்கும் நுழைவதால், நகரில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்படி ஒரு போர்டு வைத்து, வழி தெரியாமல் பல வாகன ஓட்டிகள் இதன் வழியாக செல்வதால் பெறும் அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்கள் என போக்குவரத்து போலீசார் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டி போர்டில் குமாரபாளையம் பெயர் இடம்பெற செய்யவும், பவானி, கோபிசெட்டிபாளையம் பெயர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
ai and business intelligence